வானுார் அடுத்த பெரம்பை கிராமத்தில் நித்யானந்தாவுக்கு 18 அடி உயர சிலை வைத்து, கும்பாபிஷேகம் நடத்தியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானுார் அடுத்த பெரம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். நித்யானந்தா சீடர். இவர், ஸ்ரீபத்துமலை முருகன் என்ற பெயரில் கோவில் கட்டியுள்ளார்.அந்த கோவிலின் நுழைவு வாயிலில் 18 அடி உயரத்தில் நித்யானந்தா சிவன் வேடத்தில் கையில் சூலத்துடன் நிற்பது போன்று பிரம்மாண்ட சிலை அமைத்துள்ளார்.
கோவில் மற்றும் நித்யானந்தா சிலைக்கும் நேற்று கும்பாபிஷேகம் நடத்தினார். கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.