• vilasalnews@gmail.com

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

  • Share on

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து,வானிலை மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; மரிக்கடல் பரப்பில் ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழையும், தெற்கு உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

  • Share on

800 ஆண்டுகளுக்குப் பின்னர் வானில் ஒரு அதிசய காட்சி

ஜெருசலேத்திற்கு புனித பயணம்; அரசு நிதி ரூ.20,000-ல் இருந்து ரூ.37,000 ஆக உயர்வு- முதல்வர் பழனிசாமி

  • Share on