முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு நெருக்கமானவரான சந்திரசேகரின் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு நெருக்கமானவர். இவர் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவின் வெளியீட்டாளராக உள்ளார்.
இவரது வீட்டில் வருமான வரித் துறையினர் தற்போது திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையில் 5 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள். அது போல் சந்திரசேகரின் தந்தை வீட்டிலும் 6 அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதனை ஒரு குழு அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாகவும், மற்றொரு அதிகாரிகள் குழு தொடர்ந்து சோதனை நடத்திவருவதாவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.