• vilasalnews@gmail.com

சவுக்கு சங்கரின் ட்விட்டர் பக்கம் முடக்கம்!!

  • Share on

சவுக்கு சங்கரின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் நிகழ்வுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பேசியும், விமர்சித்தும் வருபவர் சவுக்கு சங்கர். இவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் தொடர்ந்து கருத்து கூறி வருகின்றனர்.சமீபத்தில் இவர் மீது கட்டுமான நிறுவனம் ஒன்று புகார் அளித்தது.  அதேபோல் பெண் பத்திரிக்கையாளர் மாநில மகளிர் ஆணையத்தில் சவுக்கு சங்கருக்கு எதிராக புகார் அளித்தார். தனியுரிமை ,துன்புறுத்துதல், அவதூறு செய்தல் , பின் தொடருதல்  போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்றும் 2018 ஆம் ஆண்டு முதல் இது குறித்து புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை என்றும் அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். 

இந்நிலையில் சமூகவலைதளத்தில்  ஆக்டிவாக இருந்து வந்த சவுக்கு சங்கரின் ட்விட்டர்  பக்கம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் தனது மகனுடன் இருந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு இருந்த நிலையில் , எங்கள் சின்ன சின்னவர் என்று திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தியின் பெயரில் போலிக்கணக்கில் ட்வீட் ஒன்று பதிவிடப்பட்டது . இதை சவுக்கு சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு,  என்ன அவர் ஜெயேந்திரரு,  இவரு விஜயேந்திரரா என்று பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Share on

சென்னையில் ஏடிஎம் குப்பை தொட்டியில் 43 பவுன் தங்கம்!

தமிழக அரசியல் கட்சியின் நாளிதழ் வெளியீட்டாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!

  • Share on