• vilasalnews@gmail.com

800 ஆண்டுகளுக்குப் பின்னர் வானில் ஒரு அதிசய காட்சி

  • Share on

தமிழகத்தில் 800 ஆண்டுகளுக்கு பின் வானில் ஒரு அதிசய காட்சி நடைபெற இருக்கிறது.

சூரியனை பூமி உள்ளிட்ட 8 கிரகங்கள் இருக்கும் தூரத்திற்கு ஏற்றாற்போல குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு தடவை சூரியனை சுற்றி வருகின்றன. சூரியனில் இருந்து வியாழன் 5வது வரிசையிலும், சனிகிரகம் 6 வது வரிசையிலும் சுற்றி வருகிறது.சூரியனை சுற்றி வரும் ஒவ்வொரு கிரகமும் மற்ற கிரகத்துடன் சில நேரம் நேர்கோட்டில் வருவது உண்டு

அவ்வாறு வரும் போது புவியில் இருந்து பார்த்தால் அவை ஒரே நட்சத்திரம் போல் தெரியும்.இதே போன்ற நிகழ்வு வானத்தில் நடக்க இருக்கின்றது.

வானில் அருகருகே இரு கோள்கள் வருவதை காண முடியும். வியாழனும் சனியும் ஒரே நேர்கோட்டில் மின்னுவதையும் காணலாம். இரட்டை நட்சத்திரங்கள்  போல வானில் வியாழனும்,சனியும் தோன்றும்.

தமிழகத்தில் 21ஆம் தேதி (திங்கள்கிழமை) மாலை 6.30 மணி அளவில் அரிய காட்சி இரட்டை நட்சத்திரம் போல தோன்ற இருக்கிறது.

  • Share on

முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா கார் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

  • Share on