விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா கார் மீது மர்ம நபர்களால் இரும்பு கம்பி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, காரியாபட்டி தேசிய நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
தாக்குதலில் கணவர் ராமசாமியுடன் சசிகலா புஷ்பா காயம் அடைந்தார். இவர்களுடன் காரில் பயணம் செய்த ராமசாமியின் மகள் அஞ்சலியும் காயம் அடைந்ததால், மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
தப்பி ஓடிய 3 பேரை பிடிக்க காரியாபட்டி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.