• vilasalnews@gmail.com

இந்தியாவை பிரித்து கேளுங்கள் : ஜெகத் கஸ்பர் பேச்சால் சர்ச்சை!

  • Share on

இந்தியாவின் 40 சதவீத நிலப்பரப்பை பிரித்து கேளுங்கள்,'' என, முஸ்லிம்களை துாண்டி விடும் விதத்தில், பாதிரியார் ஜெகத் கஸ்பர் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமூக செயல்பட்டாளர்கள் கூட்டியக்கம் சார்பில், சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில், 19-ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜெகத் கஸ்பர் பேசியதாவது:இந்தியாவில் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது. அவர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றனர்.

அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை வழங்கும் இந்திய அரசியல் சட்டம் தான், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கும் பாதுகாப்பு. எனவே, நம் போராட்டம் என்பது, அரசியல் சட்டத்தை பாதுகாக்கும்போராட்டமாக, அதன்படி செயல்படுமாறு அரசை வலியுறுத்தும் போராட்டமாக இருக்க வேண்டும்.

இந்தியாவில் ஆதிகுடியைச் சேர்ந்தவர்களும், முஸ்லிம்களும் 40 சதவீதம் உள்ளனர். ஆனால், இந்த சமூகத்தினருக்கு, பார்லிமென்டில் எந்த பிரதிநிதித்துவமும் இல்லை. 'கேபினட்' அமைச்சர்பதவியை கொடுக்காமல், 'டோக்கன்' போடுவதுபோல இணை அமைச்சர் பதவிகளை கொடுத்திருக்கின்றனர்.

எனவே, ஆதிகுடிகளும், முஸ்லிம்களும் இணைந்து, '40 சதவீத நிலப்பரப்பை பிரித்து கொடுங்கள். அங்கு நாங்கள் நிம்மதியாக வாழ்ந்து கொள்கிறோம்' என, மத்திய அரசிடம் கேளுங்கள். அதில் ஒன்றும் தவறு இல்லை.

ஆதிகுடியினர் இல்லாவிட்டால், 20 சதவீதம் உள்ள முஸ்லிம்களாவது கேளுங்கள். அப்படி கேட்டால், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா அளவுக்கு நிலப்பரப்பு வந்து விடும். முடியாது என்றால், 'சஹாரா பாலைவனத்தையாவது கொடுங்கள். நாங்கள் அங்கு சென்றாவது வாழ்ந்து கொள்கிறோம்' என்று சொல்லுங்கள். ஏதாவது ஒன்றை கேட்டால் தானே கிடைக்கும்.

பா.ஜ.,வைச் சேர்ந்த நுாபுர் சர்மா விவகாரத்தில், 57 முஸ்லிம் நாடுகள் இணைந்து எதிர்ப்பு குரல் கொடுத்ததும், மத்திய அரசு தடுமாறியது. உள்நாட்டில் பகை சூழ்கிறபோது, வெளிநாடுகளிடம் ஆதரவு கேட்கலாம். அதற்கு, நேதாஜியும், காந்தியும் முன்மாதிரியாக இருந்துள்ளனர்.

வெளிநாடுகளிடம்ஆதரவு கோருவது ஒன்றும் தேச துரோகம் அல்ல. இவ்வாறு ஜெகத் கஸ்பர் பேசினார்.

  • Share on

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் - தமிழக அரசு அறிவிப்பு

  • Share on