• vilasalnews@gmail.com

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

  • Share on

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்புமாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மே 5 முதல் 30-ம் தேதி வரை நடந்தது. 12-ம் வகுப்பு தேர்வை 8.3 லட்சம் பேர், 10-ம் வகுப்பு தேர்வை 9.5 லட்சம் பேர் என மொத்தம் 17.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.

இந்நிலையில், 10, 12-ம் வகுப்பு களுக்கான தேர்வு முடிவுகள் இன்று ஒரே நாளில் வெளியிடப்படுகிறது. 12-ம் வகுப்புக்கு காலை 9.30 மணிக்கும், 10-ம் வகுப்புக்கு மதியம் 12 மணிக்கும் முடிவுகள் வெளியாகும். சென்னையில் தேர்வுமுடிவுகளை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.

இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய வலைதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். இதுதவிர மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய, கிளை நூலகங்கள் மற்றும் தாங்கள் படித்த பள்ளிகளிலும் இலவசமாக தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். இதுதவிர, மாணவர்களின் கைபேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

  • Share on

பாளையங்கோட்டையிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு ஜோதி தொடர் ஓட்டம்!

இந்தியாவை பிரித்து கேளுங்கள் : ஜெகத் கஸ்பர் பேச்சால் சர்ச்சை!

  • Share on