• vilasalnews@gmail.com

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

  • Share on

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய கடல் பரப்பில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

  • Share on

தமிழகத்தில் மூன்றே மாதங்களில் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரிகள் 33 பேர் கைது

முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா கார் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்

  • Share on