• vilasalnews@gmail.com

தமிழகத்தில் மூன்றே மாதங்களில் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரிகள் 33 பேர் கைது

  • Share on

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 127 சோதனைகளை நடத்தியதில், லஞ்சம் பெற்ற அரசு அதிகாரிகள் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனைகளின்போது கணக்கில் வராத 7 கோடி ரூபாய், 7 கிலோ தங்கம், 9 கிலோ வெள்ளி, 10 கேரட் வைரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலுவலகங்களிலும், அவற்றில் பணிபுரிவோர் வீடுகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில்  அளவுக்கு அதிகமாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் துறை, சார்பதிவாளர் அலுவலகங்கள், போக்குவரத்துத் துறை அலுவலகங்கள் ஆகியவற்றில் நடந்த சோதனைகளில் மொத்தத்தில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது

  • Share on

"அம்மா மினி கிளினிக்" திட்டம் - தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

  • Share on