பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய விழாவை முன்னிட்டு, பாளையங்கோட்டையில் இருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் தொண்டர்படை சார்பில் தொடர் ஜோதி ஓட்டம் நடந்தது.
பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலய 66வது ஆண்டு விழா இன்று ( மே 13 ) மற்றும் நாளை ( மே14 ) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பாளையங்கோட்டையில் இருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு 31–வது ஆண்டாக மாவீரன் வீரபாண்டிய தொண்டர் படை சார்பில், தாமிரபரணி புண்ணிய தீர்த்தம் மற்றும் ஜோதியை கொண்டு செல்லும் தொடர் ஓட்டம் நடந்தது.
பாளையங்கோட்டை வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை முன்பு நடந்த தொடக்க நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக மாநில தலைவர் வரதராஜன், மாவட்ட தலைவர் வலசை கண்ணன், மதிமுக மாவட்ட செயலாளர் நிஜாம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தொடர்ந்து, இளைஞர்களிடம் புண்ணிய தீர்த்தம் மற்றும் ஜோதியை வழங்கி தொடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான இளைஞர்கள் பாளையங்கோட்டையில் இருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு தொடர் ஓட்டமாக சென்றனர். அவர்களின் பின்னால் வாகனங்களில் ஏராளமான இளைஞர்கள்கள், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் தொண்டர் படையை சார்தவர்கள் அணிவகுத்து சென்றனர்.
வீரபாண்டிய கட்டபொம்மன் தொண்டர் படை தலைவர் விநாயகம், செயலாளர் வீரப்பெருமாள், பொருளாளர் பாலாஜி, துணை தலைவர் ராஜ்குமார், துணை செயலாளர் மாரிமுத்து, பாஞ்சை போர்முழக்கம் ஆசிரியர் செந்தில்குமார், அன்னாமலை, நெல்லை மாரிச்சாமி, த.வீ.க.ப.க மாநில துணைத்தலைவர் மல்லுச்சாமி, மதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி துணி அமைப்பாளர் வீரபொம்முதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.