• vilasalnews@gmail.com

நான் கருப்பு திராவிடன்.. அப்பா இளையராஜா கருத்துக்கு மகன் யுவன் பதிலடியா?

  • Share on

பிரதமர் மோடி பற்றிய இளையராஜாவின் கருத்துக்கு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவரின் மகன் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ள பதிவு ஒன்று பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் மோடியை அண்ணல் அம்பேத்கருடன் இசையமைப்பாளர் இளையராஜா ஒப்பிட்டு பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் மூலம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில், மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என்றார்.

அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள். நாட்டில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. பெண் குழந்தைகளை பாதுகாப்போம் - பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டம், முத்தலாக் சட்டம் மூலம் பெண்களை முன்னேற்றி இருக்கிறார் மோடி என்று குறிப்பிட்டார்.

இளையராஜா கருத்துக்கு நெட்டிசன்கள் பலர் கடுமையாக விமர்சனம் செய்தனர். அதே சமயம் இளையராஜா தனது கருத்துரிமையை வெளிப்படுத்தி உள்ளார் என்று கூறி பாஜக இவருக்கு ஆதரவாக பேசியது. இந்த நிலையில், பிரதமர் மோடி குறித்து எழுதிய கருத்தை திரும்ப பெற மாட்டேன். இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. நான் எந்த கட்சியும் சேர்ந்தவன் இல்லை. மோடிக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்லவும் மாட்டேன்.. ஓட்டு போடாதீங்க என்றும் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்றும் இளையராஜா குறிப்பிட்டதாக கங்கை அமரன் பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இளையராஜா இப்படி கருத்து தெரிவித்துள்ள நிலையில் யுவன் சங்கர் ராஜா புதிய கருத்து ஒன்றை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், நான் கருப்பு திராவிடன்.. நான் தமிழன் என்று அவர் தெரிவித்துள்ளார். அதோடு கருப்பு டி ஷர்ட் அணிந்து, கைலி கட்டி இவர் புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார். அவரின் இந்த கருத்து வைரலாகி வருகிறது.

யுவன் சங்கர் ராஜாவின் இந்த கருத்து தனது தந்தை இளையராஜாவிற்கு பதிலடியா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் இளையராஜா பாஜகவை சேர்ந்த பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். ஆனால் பாஜக திராவிட கொள்கையை ஏற்றுக்கொள்வது கிடையாது. திராவிடர் என்ற கூற்றை டெல்லி பாஜக விரும்புவது இல்லை. இந்த நிலையில்தான் யுவன் சங்கர் ராஜா திராவிடன் என்று தெரிவித்து இருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Share on

ஓடும் டெம்போ டிராவல் வேனில் இருந்து 264 பவுன் நகை சூட்கேசுடன் மாயம்!

"இன்னும் 865 ஆண்டுகள் நமக்கு உரிமை இருக்கிறது" - சட்டசபையில் புள்ளி விவரத்துடன் பேசிய ஓ.பி.எஸ்

  • Share on