• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

ஓடும் டெம்போ டிராவல் வேனில் இருந்து 264 பவுன் நகை சூட்கேசுடன் மாயம்!

  • Share on

உளுந்தூர்பேட்டை அருகே ஓடும் டெம்போ டிராவலரில் எடுத்துச் செல்லப்பட்ட 264 பவுன் நகை சூட்கேசுடன் மாயமானது குறித்து நகையை பறிகொடுத்தவர்கள் திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சென்னை வில்லிவாக்கம் அகத்தியர் தெருவில் வசித்து வரும் பெரியசாமி என்பவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 10 பேருடன் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தனது சொந்த ஊரான புதூர்நாகலாபுரத்திற்கு டெம்போட்ராவலர் வேன் மூலம் நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளனர்.

வேனின் மேற்பகுதியில் தங்களது துணிகள் மற்றும் உடைமைகள் சூட்கேஸ்களை கட்டிவைத்து சென்றுள்ளனர். நேற்று அதிகாலை உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு டீக்கடையில் தேனீர் அருந்திவிட்டு மேலே உள்ள சூட்கேசை பார்த்தபொழுது இரண்டு சூட்கேஸ்கள் மட்டும் காணாமல் போயிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அருகிலுள்ள திருநாவலூர் காவல் நிலையம் சென்று வேனின் மீது இருந்த மற்ற சூட்கேஸ்களில் இருக்கும் பொழுது 264 பவன் நகைகள் இருந்த இரண்டு சூட்கேஸ்களில் மட்டும் காணவில்லை என  புகார் அளித்துள்ளனர்.

புகாரை  விசாரித்த காவலர்கள் வேறு எங்கேனும் வாகனத்தை நிறுத்தினீர்ளா? என கேட்ட பொழுது அவர்கள் அதிகாலை இரண்டு மணிக்கு விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு கழிப்பறைக்கு சென்று விட்டு ஒரு தேநீர் கடையில் தேனீர் அருந்தியதாகவும் கூறினர் இதனையடுத்து திருநாவலூர் போலீசார் விக்கிரவாண்டி சென்று புகார் அளிக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

காவல்துறையின் ஆலோசனையின்படி பாதிக்கப்பட்டவர்கள் விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்குச் சென்ற பொழுது அங்குள்ள போலீசார் சுங்கச்சாவடி மற்றும் சாலையோர கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்துள்ளார் சோதனை மேற்கொண்டனர் அதில் விக்கிரவாண்டியில் இருந்து வாகனம் கிளம்பும் வரை சூட்கேஸ் இருந்தது தெரியவந்தது இதனையடுத்து பெரியசாமி மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீண்டும் திருநாவலூர் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளனர் இதனை தொடர்ந்து திருநாவலூர் போலீசார் புகாரைப் பெற்றுக்கொண்டு காணாமல் போன சூட்கேஸ்களை விக்கிரவாண்டி முதல் உளுந்தூர்பேட்டை வரை உள்ள சாலையோர உணவகங்கள் மற்றும் சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்தும் சாலையோர கடைகளில் பனிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டும்  தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

விளையாடியபோது விபரீதம்- ஒன்றரை வயது குழந்தை தலையில் மாட்டிக்கொண்ட பாத்திரம்!

நான் கருப்பு திராவிடன்.. அப்பா இளையராஜா கருத்துக்கு மகன் யுவன் பதிலடியா?

  • Share on