• vilasalnews@gmail.com

விளையாடியபோது விபரீதம்- ஒன்றரை வயது குழந்தை தலையில் மாட்டிக்கொண்ட பாத்திரம்!

  • Share on

அம்பத்தூர் பாடி அருகே 3ஆவது குறுக்குத்தெருவில் வசித்து வருபவர் வினோத்ராஜ் - அனிதா தம்பதியினர். அவரது வீட்டில் ஒன்றரை வயது குழந்தை யஷ்விதா எப்பொழுதும்போல் வீட்டில் விளையாடிக்கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக வீட்டில் வைத்திருந்த ஸ்டீல் பாத்திரம் குழந்தையின் தலையில் மாட்டிக்கொண்டது.

என்ன செய்வதென்று அறியாமல் திகைத்துக் கொண்டிருந்த தம்பதியினர் உடனடியாக அம்பத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் முத்து கிருஷ்ணன் மற்றும் முன்னணி தீயணைப்பாளர் நாகராஜ் குழந்தையின் தலையில் மாட்டிக்கொண்டிருந்த ஸ்டீல் பாத்திரத்தை, குழந்தைக்கு தலையில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் துரிதமாக மீட்டெடுத்தனர்.

துரிதமாக செயல்பட்டு குழந்தையின் தலையில் சிக்கியிருந்த சில்வர் பாத்திரத்தை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினரை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் குழந்தையின் பெற்றோர் வெகுவாக பாராட்டினர்.

  • Share on

டியூசன் படிக்க வந்த மாணவர்களை மயக்கி அரசு பள்ளி ஆசிரியை உல்லாசம் - கசிந்த வீடியோ..!

ஓடும் டெம்போ டிராவல் வேனில் இருந்து 264 பவுன் நகை சூட்கேசுடன் மாயம்!

  • Share on