தமிழகத்தில், " எனது இந்தியா கட்சி " என்ற புதிய கட்சி உதயமாகி உள்ளது. இந்தியாவின் முன்னணி நிறுவனமான SLO குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அனில் குமார் ஒஜா, புதிய கட்சியின் நிறுவன தலைவராக பொறுப் பேற்றுள்ளார்.
வரி இல்லா தமிழகம், அனைவருக்கும் இலவச கல்வி, இலவச மருத்துவம், இலவச தண்ணீர் விநியோகிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர, மாநகராட்சி , குடி தண்ணீர் மற்றும் கழிவு நீர் வரிகள் முற்றிலுமாக ஒழிப்பு, பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் குறைப்பு, மின் கட்டண விலை 20 சதவீதம் குறைப்பு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை 10 சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பல்வேறு வாக்குறுதி களையும் அனில் குமார் ஒஜா அளித்துள்ளார்.