• vilasalnews@gmail.com

கைலாசா நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் - நித்தியானந்தா மீது பெண் பரபரப்பு புகார்!

  • Share on

கைலாச நாட்டில்  நித்தியானந்தாவும் அவரது சீடர்களும் பெண்களை அடித்து துன்புறுத்தி பாலியல் தொந்தரவு அளித்து வருகிறார்கள். எனக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று வெளிநாட்டுப் பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்திருக்கிறார்.

தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்த நித்தியானந்தா,  பெங்களூர் அருகே பிடதியில் ஆசிரமம் அமைத்து புகழ் பெற்றார்.

இவருக்கு இந்த உலகம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் கிளைகள் இருந்தன.   இந்த நிலையில் இவர் மீது பாலியல் புகார்கள் எழுந்ததால் அந்த வழக்குகளில் கைதாகாமல் இருக்க திடீரென்று தலைமறைவானார் நித்யானந்தா.

அதன்பின்னர் கைலாசா என்ற தனிநாட்டை தான் உருவாக்கி இருப்பதாகவும்,  அடிக்கடி அதுகுறித்த தகவல்களையும் வெளியிட்டு வந்தார்.   இந்த நிலையில் அந்த கைலாச நாட்டில் தங்கியிருந்ததாக ஒரு பெண் நித்தியானந்தா மீது புகார் அளித்திருக்கிறார்.   சாரா லாண்டரி என்கிற வெளிநாட்டுப் பெண் பெங்களூருவில் உள்ள பிடதி போலீசாருக்கு இமெயில் மூலமாக அந்தப் புகாரினை அனுப்பி இருக்கிறார்.

அந்த புகாரில்,   கைலாச நாட்டில் நித்தியானந்தாவும் அவரது சீடர்களும் அங்கிருக்கும் பெண்களை அடித்து துன்புறுத்தி பாலியல் தொந்தரவு அளித்து வருகிறார்கள். எனக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தார் நித்யானந்தா என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார்,   இதுபோன்ற இ-மெயில் புகார்களை ஏற்க முடியாது.  நீங்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் இந்தியாவின் ஏதாவது ஒரு காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுப்பது தான் சரியானதாக இருக்கும் என்று பதில் அனுப்பி இருக்கிறார்கள்.

  • Share on

தொடர்ந்து 4 நாட்கள் மூடப்படும் வங்கிகள்!

சைவ உணவங்களில் மட்டும் தான் நிறுத்த வேண்டும் - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக அரசு

  • Share on