• vilasalnews@gmail.com

நீர் வழிப்பாதை அருகே பொது கழிப்பறை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு : வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் ஆய்வு!

  • Share on

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீர் வழிப்பாதை அருகே பொது கழிப்பறை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, அங்கு வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ளது திருவாலவாய் நல்லூர் கிராமம். இந்த கிராமத்திற்கு உட்பட்ட நகரி கண்மாய் அருகே புதியதாக பொதுக் கழிப்பறை அமைப்பதற்காக வானம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் கழிப்பறை கட்டும் இடத்திற்கு அருகே காவிரி கூட்டு குடிநீர் திட்டம் வழங்கக்கூடிய குழாய் அறையும், மற்றொரு புறத்தில் நீர்வரத்து கால்வாயும் செல்வதால் கழிப்பறை கட்டினால் அதிலிருந்து வெளியேற கூடிய கழிவுநீர் நல்ல தண்ணீரோடு கலக்க வாய்ப்புள்ளதாக கூறி பொதுமக்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய பாரதிய கிசான் சங்க தலைவர் பார்த்தசாரதி, இந்த பகுதியில் சம்பந்தமே இல்லாத ஒரு இடத்தில் பொது கழிப்பறை அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது கழிப்பறை அமைக்கப்படும் இடம் கண் மாய்க்கும் நீர்வரத்து கால்வாய் அருகே உள்ள பகுதியாக இருப்பதோடு கூட்டு குடிநீர் திட்ட குழாயும் அருகிலேயே செல்வதால் இதனை நிறைவேற்றக் கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எங்களது புகாரின் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் வள்ளி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.

பொது மக்களின் விருப்பத்திற்கு மாறாக நடைபெறும் இந்த பணியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

  • Share on

கல்யாணமே ஆகாத எம்.எல்.ஏ.வுக்கு கிராண்ட் சன் வந்தது எப்படி?எம்.ஆர்.காந்தி விளக்கம்!

பிறந்த நேரம் சரியில்லை...பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்!

  • Share on