தமிழகத்தில் கூனிக்குறுகி நிற்கும் செய்தித்துறை முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் செய்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஜனநாயக முறைப்படி மத்திய அரசின் அங்கீகாரம் பெற்று மாநில அரசின் ஒப்புதல் பெற்று பெரிய, நடுத்தர, சிறிய நாளிதழ்கள் பருவ இதழ்கள் செய்திகள் வெளியிட்டு இயங்கி வருகின்றனர். திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் கடந்த கால ஆட்சியில் செய்தியாளர்கள் மற்றும் ஊடகத்துறை நிறுவனங்கள் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்றார். அது அனைவருக்கும் மகிழ்ச்சியான தகவல் அதே வேலையில் தமிழகம் முழுவதும் உள்ள ஊடகத்துறையில் பணியாற்றும் செய்தியாளர்கள் புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என்று மாநில மற்றும் மாவட்ட பதிவு பெற்ற சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைத்தனர். அதன் படி புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு சட்டமன்றத்தில் பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியீடப்பட்டு இருந்த நிலையில் தற்போது நலவாரியம் உறுப்பினர்களாக தமிழக அரசின் சார்பில் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு புறம் மகிழ்ச்சி என்றாலும் அதில் உள்ளவர்கள் சிலர் பணியாற்றும் தொழிலாளர்களுடன் கஷ்ட, நஷ்டங்களை தெரிந்தவர்கள் இல்லை.
அதனால் இவர்களுக்கு தொழிலாளர்களை பற்றி எதுவும் தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. யாரோ ஒருவர் தயாரித்து கொடுக்கும் கடிதத்தை தான் சமர்ப்பிக்க இருக்கின்றனர். இந்த உறுப்பினர்களால் ஊடகத்துறையில் உள்ளவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது என்று பல கருத்துகளை தெரிவிக்கின்றனர். அதே போல் தமிழகம் முழுவதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது பல மாவட்டங்களில் சென்னை தலைமை செயலகத்தில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் அனுமதி என்று பல மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் பலர் பாதிக்கப்படுகின்றனர். அதே போல் நெல்லை, தென்காசி உள்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் வழங்கப்படும் அடையாள அட்டை வழங்கப்படாமல் தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் வழங்கிவிட்டு தரம் பிரித்து பார்க்கும் நிலையில் தொடர்கிறது. இந்த நிலையும் மாற வேண்டும். இதே போல் தூத்துக்குடி மாவட்டம் உருவாகி 35 ஆண்டுகள் கடந்து விட்டன. மாவட்ட நிர்வாகத்தால் வழங்க வேண்டிய வீட்டுமனை வேண்டும் என்று தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் கடந்த 2015ம் ஆண்டு முதல் கோரிக்கை வைக்கப்பட்டு 2017ம் ஆண்டு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று வரை அதை முழுமையாக பணி முடித்து தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் செயலாளர் இசக்கிராஜா, பொருளாளர் செந்தில்முருகன், துணைச் செயலாளர் சிதம்பரம் உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொண்டப்படி கொடுக்கப்பட்ட பட்டியல் காட்சிப்பொருளாக இருந்து வருகின்றனர். இந்த பணியும் விரைவாக நடைபெற வேண்டும்.
தலைமைச் செயலகத்தில் வழங்கப்படும் அடையாள அட்டை போன்று மாவட்ட கலெக்டர் கையெழுத்திட்ட அடையாள அட்டை கடந்த 3 ஆண்டுகளாக பல மாவட்டங்களில் வழங்கப்படாமல் உள்ளன. இதில் உள்ள குறைபாடுகளையும் தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். முதல்வராக பணியாற்றும் மு.க.ஸ்டாலின் தமிழகம் எல்லா துறையிலும் முதன்மை பெற வேண்டும் என்று பணியாற்றி வருகிறார். அவருக்கு துணையாக தலைமைச் செயலாளர் இறையண்பு, செய்தித் துறை இயக்குநர் ஜெயசீலன், செய்தித்துறை அமைச்சர் உள்பட அனைத்து அமைச்சர்களும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள், செயல்பாடுகள் முதலமைச்சரின் திட்டங்களையும், செயல்பாடுகளையும் மறைக்கும் விதமாகவே அமைந்துள்ளது. இது முழுமையாக தமிழகம் முழுவதும் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
செய்தித்துறை இயக்குநருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள் செய்யும் தவறுகளால் முதலமைச்சருக்கு கலங்கம் ஏற்படும் நிலை உள்ளது. கடந்த 4ம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர் தேர்வின் போது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக-வினர் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் கூட்டணிக் கட்சியை சேர்ந்த தலைவர்கள் மனவேதனையடைந்து முதலமைச்சரிடம் நேரிடையாக புகார் தெரிவித்தனர்.
இதற்கு வருத்தம் தெரிவித்து முதலமைச்சர் பேசுகையில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் வாபஸ் பெற வேண்டும் இல்லையேல் கட்சியை விட்டு நீக்குவேன். கூட்டணி தர்மத்திற்கு எதிராக செயல்பட்டவர்களால் நான் கூனிக்குறுகி நிற்கிறேன் மிகவும் வேதனையடைகிறேன் என்று மதச்சார்ப்பற்ற கூட்டணி சிதறி விடக்கூடாது என்பதற்காக வெளிப்படையாகவே வருத்தம் தெரிவித்துக் கொண்டார். சிறிய கட்சியைக் கூட மதிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் எப்படி நடந்து கொள்கின்றார் என்ற அவரது நடவடிக்கைக்கூட முழுமையாக கடைப்பிடிக்காமல் செய்தித்துறையில் இருக்கின்ற அதிகாரிகள் நடுத்தர, சிறிய பத்திரிகை என்று தரம் பிரித்து பார்ப்பது வேதனையாக அமைந்துள்ளது. முதலமைச்சர் சிறிய கட்சிகளையும் மதிக்கிறார். செய்தித்துறையினர் நடுத்தர, சிறிய பத்திரிகைகளை காலில் போட்டு மிதிக்கின்றனர். ஒரு தொழிலாளியின் கஷ்டங்களை ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு பணியாற்றுபவர்களுக்கும் உத்தரவு போடுபவர்களுக்கும் தெரியாது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் முதல்வர் கீழ்மட்டத்திலிருந்து படிப்படியாக பல்வேறு பொறுப்புகளுக்கு பொறுப்பாக பணியாற்றி இன்று முதலமைச்சராக பணியாற்றும் அவர் தன்னை முன்னிலைப்படுத்தாமல் தன் மாநிலம் முதலமையாக வரவேண்டும் என்று பணியாற்றுபவரை பார்த்தாவது செய்தித்துறை அதிகாரிகள் பத்திரிகைகளை தரம் பிரித்து பார்க்காமல் முதலமைச்சர் எப்படி கூட்டணி கட்சிகள் சிதறி விடக்கூடாது என்று பணியாற்றுகிறாரோ அதே போல் அரசுக்கு எதிராக பத்திரிகையாளர் சங்கமும், பத்திரிகைகளும் நமக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊடகத்துறையில் உள்ளவர்களுக்கு அரசின் சார்பில் இலவச பேருந்து அடையாள அட்டை மற்றும் அரசின் சார்பில் வழங்கப்படும் அடையாள அட்டை வழங்கி தூத்துக்குடி ஊடகத்துறையில் உள்ளவர்களுக்கு வீட்டுமனை வழங்காமல் இருப்பதை போல் மற்ற மாவட்டங்களிலும் இந்த நிலை இருந்தால் அவர்களுக்கும் சேர்த்து வீட்டுமனை வழங்குவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள ஊடகத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்