தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மார்ச் 12 ,13 ஆகிய தேதிகளில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க 15 வது தமிழ் மாநில 2 நாள் மாநாடு எஸ்.பொன் சேகர், கே.எஸ்.சங்கரன் வளாகத்தில் வைத்து நடைபெற்றது .
இரண்டாவது நாள் நடைபெற்ற மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியாக தொகுப்புரை, நிர்வாகிகள் தேர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 17 பேர் கொண்ட புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், மாநில தலைவராக மயிலாடுதுறை கலா , பொதுச்செயலாளர் புதுக்கோட்டை மலர்விழி , மாநில பொருளாளர் காஞ்சிபுரம் திலகவதி , மாநில துணை தலைவர்களாக மதுரை நூர்ஜஹான் , தேனி பேய்த்தேவன், திருவண்ணாமலை அண்ணாதுரை , திருச்சி பெரியசாமி , தூத்துக்குடி மு. தமிழரசன் , சென்னை சுபந்தி , கிருஷ்ணகிரி மஞ்சுளா ஆகியோரும், மாநிலச் செயலாளர்களாக சென்னை கற்பகம் , வேலூர் சுமதி , தருமபுரி மகேஸ்வரி , மதுரை பாண்டிச்செல்வி , திருவாரூர் லதா , கோவை நிர்மலா , சிவகங்கை மிக்கேலம்மாள் ஆகியோரும், மாநில தனிக்கையாளர்களாக விழுப்புரம் தேசிங்கு , கன்னியாகுமரி தங்கம் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர் நடைபெற்ற பொது மாநாட்டில் மாநில தலைவர் கலா தலைமை வகித்தார். வரவேற்புக் குழுத் தலைவர் சுந்தர் ராஜன் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் செல்வம், மாநிலத் தலைவர் அன்பரசு ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் மலர்விழி தீர்மானங்கள் விளக்க உரையாற்றினார். நிறைவாக பேய்த்தேவன் நன்றியுரை ஆற்றினார்.