• vilasalnews@gmail.com

சரித்திரம் படைக்கும் பெண்கள் அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகள் - கனிமொழி எம்பி!

  • Share on

நாள்தோறும் தடைகளைத் தகர்த்து, அன்றாடம் சரித்திரம் படைக்கும் பெண்கள் அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகள் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் , திராவிட முன்னேற்றக் கழகம் மாநில மகளிரணிச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

மேலும், ஆண் பெண் இருவரும் சமமாக மதிக்கப்படும் ஒரு சமூகத்தை உருவாக்கவும், பாகுபாடுகளற்ற ஒரு நிலையைக் காணவும், நாம் கடந்து வந்திருக்கக் கூடிய பாதை என்ன, நாம் செல்ல வேண்டிய தூரம் என்ன என்பதை பற்றி சிந்திக்கவும், இந்த நாளை நாம் பயன்படுத்துவோம். எனவும் தனது உலக மகளிர் தின வாழ்த்து பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

  • Share on

கடலூர் திமுக எம்எல்ஏ கோ. அய்யப்பன் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்!

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க 15 வது தமிழ் மாநில 2 நாள் மாநாடு!

  • Share on