• vilasalnews@gmail.com

தமிழக அரசுப்பணியில் புவிஇயற்பியல் படிப்புக்கான அரசு பணியிடங்கள் உருவாக்க வேண்டும்- வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் எதிர்ப்பார்ப்பு!

  • Share on

தமிழக அரசுப்பணியில் புவிஇயற்பியல் படிப்புக்கான அரசு பணியிடங்கள் உருவாக்க வேண்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் எதிர்ப்பார்ப்பு!

தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்ட  பல வரலாற்று சுவடுகள் எதிர்கால மாணவ , மாணவியர்களுக்கு நாட்டுமக்களுக்கு தெரிய வேண்டும் என்று மத்திய அரசின் தொல்லியல்துறை பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதே போல் தமிழக அரசும் பல மாவட்டங்களில் உள்ள வரலாற்றில் சின்னங்கள் மற்றும் பூமிக்கடியில் உள்ள பழமைவாய்ந்த தொல்லியல் துறைக்கு சம்பந்தப்பட்டவை ஆராய்ந்து அதற்கென நிதியும் ஓதுக்கப்பட்டு அத்துறையில் அமைச்சராக தங்கம் தென்னரசு பணியாற்றி வருகிறார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பு திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டில் 7 அம்ச திட்டங்களை அறிவித்து இதை 10ஆண்டுகளில் முழுமையாக செயல்படுத்துவோம் என அறிவித்திருந்தார். அதன்பின் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பின் நடைபெற்ற அமைச்சர்கள் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தின் போது எல்லாத்துறைகளிலும் தமிழக அரசு வளர்ச்சியடையவேண்டும். அதற்கு முன் மாதிரியாக அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்ற வேண்டும். புதிய தொழில்கொள்கை உருவாக்கி தொழிற்சாலைகள் தொழில்வளங்கள் பெருக வேண்டும்.

வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு பல நிறுவனங்களை அமைப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு தடையின்றி அதிகாரிகளும் அதற்குரிய அமைச்சர்களும் செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது மட்டுமின்றி படித்த பட்டதாரி மாணவ மாணவிகள் வேலை வாய்ப்பு மூலம் பதிவு செய்யப்பட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட வேண்டும் என்று உத்திரவிட்டிருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் தமிழர்களுக்கு தான் இனி வாய்ப்பு என்று ஏற்கனவே சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் எவ்வளவு  தண்ணீர் ஊற்றினாலும் நிரம்பாத நெல்லை அதிசய கிணறு மர்மத்தை ஐ.ஐ.டி கூறுவதற்கு முன்பாகவே மூன்று ஆண்டுகளுக்கு முன் ஆராய்ச்சி மூலம் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டறிந்தனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த ஆயன்குளம் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கன மழையில் பல ஆயிரம் கனஅடி அளவு நீர் உள் வாங்கியும் வற்றாத கிணறு ஒன்று இருந்தது. இக்காரணத்தால் மக்கள் இதனை அதிசய கிணறு என்று அழைத்தனர்.

எதனால் இது இவ்வளவு கனஅடி நீரை உள் வாங்குகிறது என விடை கண்டறிய முடியாமல் அனைவரும் திகைத்தனர். மேலும் இதனை அந்த நேரத்தில் தற்போது தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, அப்போதைய திருநெல்வேலி கலெக்டரும் நேரில் ஆராய்ந்தனர். மேலும் அந்த மர்ம முடிச்சை முழுமையாக கண்டறிய கலெக்டர் சென்னை ஐ.ஐ.டி குழுவினர் வந்து ஆராய வேண்டுமென தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.

இதன் தொடர்ச்சியாக சென்னை ஐ.ஐ.டி பேராசியர் தலைமையில் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் பிளவுபட்ட சுண்ணாம்பு படுகையினால் இக்கிணறு அதிகப்படியான நீரை உள்வாங்கி கொள்வதாக கருத்துரை ஒன்றை கடந்த பதினெட்டாம் தேதி ஐ.ஐ.டி சென்னை வெளியிட்டது.

ஆனால் இக்கருத்தை சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக புவி இயற்பியல் ஆராய்ச்சி மாணவர்கள் கண்டறிந்து ஆராய்ச்சி கட்டுரையாக வெளியிட்டுள்ளனர்.

மேலும், இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டும் வருகின்றனர். ஐ.ஐ.டி குழு கண்டு பிடிப்பதற்கு முன்னரே மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் இம்மர்மத்தை கண்டறிந்தது அனைத்து தரப்பினரையும் மிக ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் இது போன்ற பல புவிசார் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தமிழக அரசுப்பணியில் இந்த புவிஇயற்பியல் படிப்புக்கான அரசு பணியிடங்கள் வழங்கி பல வரலாற்று ஆராய்ச்சியாளர்களை உருவாக்கி தற்போது இந்தியாவில் உள்ள மாநிலங்களில் நல்ல முறையில் பணியாற்றும் மாநிலமாக உள்ள தமிழக அரசு மேலும் பல பெருமைகளை பெறுவதற்கு வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஊக்குவித்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

  • Share on

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - கொரோனா தடுப்புக்கு செலவான தொகை!

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் 12 வது வார்டு வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரம்!!

  • Share on