நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மட்டும், 12 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.
தேர்தல் அறிவிப்பை, ஜன., 26ம் தேதி மாநில தேர்தல் கமிஷன் வெளியிட்டது.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது.
இதையடுத்து, ஓட்டுப்பதிவு மையங்களுக்கு முன்கூட்டியே வெப்பமானி, சானிடைசர், முக கவசம், கையுறை உள்ளிட்ட 13 பாதுகாப்பு உபகரணங்கள் தேவையான அளவில் வழங்கப்பட்டன.
மாநிலம் முழுதும் 30 ஆயிரத்து 735 ஓட்டுச்சாவடிகளில், அவை பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு, கொரோனா தடுப்பு பணிகளுக்கு மட்டும், 12 கோடி ரூபாயை, மாநில தேர்தல் கமிஷன் செலவிட்டுள்ளது.