திண்டுக்கல் மாவட்டத்தில் பாளையம் பேரூராட்சி உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே நகர பஞ்சாயத்தாக பாளையம் பேரூராட்சி இருந்துள்ளது.
1939ஆம் ஆண்டு பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட அய்யாக்கண்ணூரை சேர்ந்த நிலக்கிழார் ராமசாமி நாயக்கர் முதல்முறையாக பாளையம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
அன்றிலிருந்து அதாவது 1939 முதல் 1976 வரை தொடர்ந்து 37 ஆண்டுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பாளையம் பேரூராட்சி தலைவர் பதவி வகித்து வந்துள்ளார். தலைவர் பதவி வகித்த காலத்திலேயே 1976 ஆம் ஆண்டு ராமசாமி காலமானார். இதனையடுத்து அவரது மைத்துனர் ராஜகோபால் 1996 முதல் 2001 வரை பேரூராட்சி தலைவர் பதவி வகித்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து ராமசாமி மகன் சோமு ராஜ் 2001 முதல் 2006 வரை பேரூராட்சி தலைவர் பதவி வகித்து வந்தார். அதன்பின் இதே குடும்பத்திலிருந்து திமுகவைச் சேர்ந்த சக்திவேல் 2006 முதல் 2011 வரையும், அதிமுகவைச் சேர்ந்த பெருமாள் 2011 முதல் 2016 வரையும் தலைவர் பதவி வகித்தார்.
47 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பாளையம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு மக்களால் தேர்வு செய்யப்பட்டது பேரூராட்சி வரலாற்றில் சிறப்பு அம்சமாக கருதுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.