• vilasalnews@gmail.com

ராமஜெயம் கொலை வழக்கு - தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்!

  • Share on

ராமஜெயம் கொலை வழக்கை தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டிஎஸ்பி மதன் மற்றும் சென்னை சிபிஐ-யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய குழு விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி, சிபிஐ என 10 ஆண்டுகள் விசாரணை நடத்தியும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படவில்லை. இதனையடுத்து விசாரணையில் முன்னேற்றம் இல்லை என சகோதரர் கே.என் ரவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ராமஜெயம் கொலை வழக்கு குறித்த அடுத்தக்கட்ட விசாரணையை சிறப்பு புலனாய்வு குழு தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் புலனாய்வு குழு அமைக்க உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், 15 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

  • Share on

ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை - முழு தகவல்

பேரூராட்சி தலைவர் பதவி - ஒரே குடும்பத்திற்கு 47 ஆண்டாக ஆதரவு!

  • Share on