• vilasalnews@gmail.com

' வாசன் ஐ கேர் ' நிறுவனர் மரணம்!

  • Share on

வாசன் ஐ கேர்   நிறுவனர் டாக்டர் ஏ எம்.அருண் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

திருச்சியை தலைமையிடமாக கொண்டு இந்தியா முழுவதும் 170 க்கும் மேற்பட்ட இடங்களில் கண் மருத்துவமணை மூலம் பொது மக்களுக்கு  வாசன் ஐ கேர்  மருத்துவ சேவை வழங்கி வருகிறது.

இந்த மருத்துவமனையை டாக்டர் ஏ.எம்.அருண் ( வயது 52 ) கடந்த 2002 ஆம் ஆண்டு நிறுவினார். தொடங்கிய சில ஆண்டுகளிலேயே வாசன் ஐ கேர் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியது.

வாசன் ஐ கேர் நிறுவனர் டாக்டர் ஏ.எம்.அருண் மயிலாப்பூர் பகுதியில் வசித்து வந்தார்.இந்த நிலையில் அவருக்கு நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரை சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர்  உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து , அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல் அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. டாக்டர் அருண்  உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் வாசன் ஐ கேர் ஊழியர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.Wasan Eye Care founder Dr. A. M. Arun has passed away.

கரூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எம்.பி.யாக இருந்த முருகையா என்பவரின் மகனான இந்த அருண், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வலதுகரமாக திகழ்ந்தார். ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது வாசன் ஐகேர் நிறுவனத்துக்கு வங்கிக் கடன் உள்ளிட்ட பல சலுகைகள் அளிக்கப்பட்டதாகவும், இதன் பலனாக அந்த நிறுவனத்தின் பங்குகளை கார்த்தி பெற்றுக் கொண்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.  

இவர் கடந்த சில நாட்களாகவே கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானதாகவும், கடன் உள்ளிட்ட பிரச்சினைகளால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தொழில் வட்டாரங்களில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அருணின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே மரணத்தின் காரணம் தெரியும் எனக் கூறப்படுகிறது.

  • Share on

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது - தமிழக அரசு

' வாசன் ஐ கேர் ' குழுமத்தின் நிறுவனா் அருண் மரணம் : தமிழக அரசு விசாரணை நடத்த கோாி பாஜக பிரமுகா் ட்வீட்!

  • Share on