பழனியில் திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஸ்டாலின் உருவப்படத்தை எரிக்க முற்பட்டபோது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
ராமநாதபுரத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் 113வது ஜெயந்தி விழா அக்டோபர் 30 அன்று கொண்டாடப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின், ஆகியோர் வந்து மரியாதை செலுத்தினர்.அங்கு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட திருநீரை கீழே விசி அவமதித்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவியது.
இந்நிலையில்,பழனியில் திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்து பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் .ஆர்பாட்டத்தில் ஸ்டாலினின் உருவப்படத்தை எரிக்க முற்பட்டனர். அப்போது அவர்களை தடுக்க முயன்ற போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.