ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.
இதற்கிடையே கொரோனா 3-வது அலை தீவிரமாக உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு, தேர்தலை தள்ளிவைக்க முடியாது. கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து தேர்தலை நடத்தலாம் என உயர்நீதிமன்றம் கூறியது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில் தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.