தமிழ்நாட்டில் மது விற்பனையை அரசே பொறுப்பேற்று நடத்தி வருகிறது. டாஸ்மாக் மூலம் வரும் மது விற்பனை வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தபடி உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் 11 சதவீதம் அதிகரித்துள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2021-ம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை 21,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. தமிழகத்தில் 2020-ம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை 19,000 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் 11 சதவீதம் அதிகரித்துள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.