அமலாக்கத்துறையினர் பல்வேறு மாநிலங்களில் ஒரே நேரத்தில் 26 இடங்களில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.
சென்னை,மதுரை, தென்காசி, பெங்களூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, மல்லபுரம் உள்ளிட்ட நகரங்களில் அமலாக்கததுறை அதிகாரிகள் சோதனை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியின் தலைமையகம் உட்பட பல்வேறு அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இச்சோதனையின்போது அக்கட்சியின் வங்கிக் கணக்குகள், பணப்பரிமாற்றங்கள் சோதனையிடப்பட்டன.
கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் சிஏஏவுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களைத் தூண்ட மிகப்பெரிய தொகை இக்கட்சியினருக்கு கை மாறியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
பி.எப்.ஐ கட்சியின் வங்கிக்கணக்கில் பரிமாற்றம் செய்யப்பட்ட 120 கோடி ரூபாயில் 50 கோடிக்கும் மேல் பணம் வெளிநாட்டில் இருந்து வந்ததாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
டெல்லியின் ஷகீன் பாக்கில் வன்முறை வெடித்தபோதும் இந்த கட்சிக்கு இருந்து பணம் வந்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.