• vilasalnews@gmail.com

முதல்வருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டுக்கொள்வாரா?

  • Share on

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் செயல்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டுக்கொள்வாரா?

தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த காலத்தில் எழுத்தறிவு, படிப்பறிவு இல்லாத மாநிலமாக திகழ வேண்டுமென்று கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை ஆரம்பக்கல்வியை தொடங்கி அதன் மூலம் குழந்தைகளை பள்ளிக்கு வரவழைத்து மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி மாணவ, மாணவியர்களுக்கு எழுத்தறிவு, படிப்பறிவு வளர செய்தார். அவருடைய காலத்திற்கு பின்பு பணியாற்றிய முதலமைச்சர்கள் இவருடைய கல்வி, கல்வித்திட்டங்கள் மதிய உணவு திட்டங்களை விரிவுப்படுத்தி செயல்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், காமராஜர் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

இன்று வரை அனைத்து தரப்பினராலும் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போதைய கல்விக்கும், தற்போதுள்ள கல்விக்கும் வித்தியாசங்கள் அதிகம் உண்டு இருந்தாலும் தமிழகம் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் அனைத்து துறை அதிகாரிகள், அமைச்சர்கள் அனைவரது மத்தியிலும் பேசும் பொழுது தமிழகத்தின் வளர்ச்சியில் எனக்கு மட்டும் பங்களிப்பு உள்ளது என்று யாரும் நினைக்கக் கூடாது. உங்களுடைய ஒட்டுமொத்த பணிகளின் மூலம் எல்லா துறைகளிலும் தமிழ்நாடு இந்தியாவிற்கு முன்னோடி மாநிலமாக திகழ வேண்டும். அனைவரும் அதற்கு ஏற்றார் போல் பணி செய்ய வேண்டும் என்ற கருத்துகளை பரிமாறி இன்று வரை ஓய்வின்றி உழைத்து கொண்டியிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கல்வித்துறையில் உள்ள அதிகாரிகள் செய்யும் செயல்பாடுகளால் அத்துறையிலுள்ள பலர் பாதிக்கப்பட்டு குழம்பிக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு பள்ளி துணை ஆய்வாளர் சங்கம் அரசுக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் ஆய்வாளர்களாக செயல்படுபவர்கள் தமிழகத்திலுள்ள 585 கல்வி மாவட்டத்திலும் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களுடைய பணியானது பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் நிறைக்குறைகளை கண்டறிந்து அதை மாவட்ட கல்வி அலுவலர்களுடன் கலந்து பேசி நிவர்த்தி செய்து படிப்பின் மூலம் அவர்களுடைய எதிர்காலத்தை வலப்படுத்துவதும் அரசின் திட்டங்களையும், செயல்பாடுகளையும் எடுத்துக்கூறி பணியாற்றி வருகின்றனர். கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக கொரோனா என்ற ஒரு தொற்று நோயின் காரணமாக பல்வேறு துறையை சார்ந்தவர்கள் அரசுக்கு துணையாக பணியாற்றியுள்ளனர். அதிலும் கல்வித்துறையில் உள்ள இவர்களை போன்ற ஆய்வாளர்கள் முன்களப்பணியாளர்களாக இருந்து அந்த நேரத்திலும் பணியாற்றியுள்ளனர். இது போக அரசின் கொரோனா உதவித் தொகை இந்த சங்கத்தின் மூலம் அரசுக்கும் வழங்கியுள்ளனர். பல்வேறு வகையில் தனது குடும்பநலன் முக்கியம் என்று கருதியவர்கள் மத்தியில் எதிர்கால மாணவ, மாணவியரின் நலன் தான் முக்கியம் என்று கருதி மெழுகுவர்த்தி தன்னை உருகி கொண்டு மற்றவர்களுக்கு வெளிச்சம் கொடுப்பது போல் இவர்களுடைய பணிகள் அதே போல் அமைந்துள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். படிப்பறிவு, கல்வியறிவு இல்லாத மாநிலம் எந்த துறையிலும் வளர்ச்சி அடைய முடியாது என்பதை உணர்ந்து பணியாற்றும் ஆய்வாளர்களை பழிவாங்க வேண்டும் அரசுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு புதிதாக பொறுப்பேற்றுள்ள பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தக்குமார் அத்துறையின் அமைச்சர், அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் கலந்து ஆலோசனை எதுவும் செய்யாமல் தன்னிசையாக முடிவெடுத்து கடந்த 6ம் தேதி திடீரென ஒரு உத்தரவை வெளியிட்டு 7ம் தேதி முதல் வேறு பணிக்கு செல்ல வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் பல்வேறு வகையில் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த உத்தரவை பிறப்பித்துள்ள அதிகாரி கடந்த ஆட்சியில் உள்ளவர்களுக்கு விசுவாசமாக இருப்பதாக கூறப்படுகிறது. புதிதாக சிலரை தேர்ந்தெடுக்க இருப்பதாக தகவல்கள் உலா வருகிறது. மனிதனுக்கு பார்வைக்கு கண் முக்கியம் என்பதை உணர்ந்து பள்ளிக்கல்வித்துறையில் நடைபெறுகின்ற தேவையில்லாத உத்தரவுகளையும் அரசுக்கு எதிராக செயல்படும் வகையில் உலா வரும் அதிகாரிகளின் தவறான வழிக்காட்டுதலுக்கு துணை செல்பவர்களையும் நேர்மையாக அரசும், அதிகாரிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவை மதிக்காத அதிகாரிகளையும், கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழியுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்படும் அதிகாரிகளை தலைமை செயலாளர் இறையண்பு, முதலமைச்சரின் தனிச்செயலாளர்கள் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். கல்வித்துறையை ஏலம் விடுவதை தடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட கல்வித்துறை ஆய்வாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

  • Share on

திக தலைவர் கி.வீரமணிக்கும் பாதிப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வீட்டில் ரெய்டு...!

  • Share on