குற்றால அருவிகளில் 14 மற்றும் 15 ம் தேதிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையின் போது அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் நாளை 14ம் தேதி மற்றும் நாளை மறுநாள் 15ஆம் தேதி குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி மற்றும் சுற்றுலா தளங்களில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.