தனது ஆன்மிக சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அன்னபூரணி அரசு அம்மா, உடனடியாக தனக்கும், தனது பக்தர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்த அன்னபூரணி அரசு அம்மா, அங்கு புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தனக்கும் மொபைல் போன் மூலமாகவும், வாட்ஸ்ஆப் மூலமாகவும் தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும், இதனால் தனக்கும், தன் பக்தர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அன்னபூரணி அரசு அம்மா, தன்னை ஆன்மிக பணியில் ஈடுபடக் கூடாது என தொடர்ந்து சிலர் மிரட்டி வருவதாகவும், தொடர்ந்து வரும் மிரட்டல்கள் காரணமாக, தனது ஆன்மிக சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அன்னபூரணி அரசு அம்மா, உடனடியாக தனக்கும், தனது பக்தர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.