• vilasalnews@gmail.com

மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல்!

  • Share on

மதுரை மத்திய சிறைச்சாலையில் விசாரணை கைதிகள் ஜெயிலில் உள்பகுதியில் உள்ள கட்டிடத்தின் மாடி மீது ஏறி சாலையில் கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு எரிந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் மதுரை மத்திய சிறைச்சாலை மிகவும் பெரியது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில், ஆண்கள் மற்றும் பெண்கள் சிறை என 2 வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று மதியம் சிறை வளாகத்தில் இருக்கக்கூடிய 2 விசாரணை கைதிகள் குழுவிற்கு இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து, 50க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் சிறையின் மேல் தளத்தில் ஏறிக்கொண்டு கற்கள் மற்றும் பாட்டில்களை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சாலையில் செல்லக்கூடிய பொதுமக்கள் மீது ஏறிந்து வருகிறார்கள். கூச்சலிட்ட படியே ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக சாலையில் செல்லக்கூடிய பொதுமக்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புது ஜெயில் சாலை முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. 

கைதிகள் ரகளையை தொடங்கியது உடனே சிறை நிர்வாகம் மதுரை மாநகர காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சிறை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிறையின் மேல் தளத்தில் இருக்கக்கூடிய கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கீழே இறங்குவதற்கான பணிகளை சிறை காவலர்கள் ஈடுபட்டனர். கடந்த 2019ம் ஆண்டு இதுபோன்று சிறை விசாரணை கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

  • Share on

இட்டமொழி ஊராட்சியில் நலத்திட்ட உதவி : ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., வழங்கினார்!

மிரட்டுறாங்க... ஆன்மிக சேவை பாதிக்குது... சென்னை கமிஷனரிடம் அன்னபூரணி புகார்!

  • Share on