இட்டமொழி ஊராட்சியில் ஏழை எளிய மக்களுக்களுக்கான நலத்திட்ட உதவிகளை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., வழங்கினார்.
நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இட்டமொழி பஞ்சாயத்தில் உள்ள காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகத்தில் வைத்து ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர்.மனோகரன் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர் செல்லப்பாண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ்ஃபோர்டு, மாவட்ட பொதுச்செயலாளர் நம்பித்துரை, இட்டமொழி காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் ஞான்ராஜ், சித்திரைவேல், ஐசக், சரவணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.