அன்னபூரணி அரசு அம்மா ஆதிபராசக்தியின் மறு உருவம் என ஒரு கும்பல் கூறி வரும் நிலையில் தற்போது செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் அவரை காண குவிந்து வருகின்றனர்.
அன்னபூரணி அரசு அம்மா என்ற பேஸ்புக் பக்கத்தில் தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என கூறிக் கொண்டு பொதுமக்கள் பக்தி பரவசத்தில் பூஜை செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்னபூரணி அரசு அம்மா என்கிற பெயரில் தொண்டு நிறுவனம் வேறு நடத்துகிறார். அரசால் அங்கீகாரம் பெற்றதா இதுவரை யாரெல்லாம் நன்கொடை அளித்துள்ளார்கள். அரசுக்கு என்ன ஆனது. தனது காதலனின் உருவ சிலையை வடிவமைத்து சாமியார்போல நடிப்பது ஏன் என பல்வேறு கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். இவர் போன்ற புல்லுருவிகளால் சனாதன தர்மத்தின் மாண்பு குலைகிறது என பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அன்னபூரணி தற்போது ஆதிபராசக்தியின் மறு உருவம் என அழைக்கப்பட்டு சாமியாராக வளம் வருகிறார். முகம் முழுக்க பேசியல் ஐ ப்ரோ த்ரெட்னிங் என பக்காவாக அலங்கரித்து கழுத்தில் பல மாலைகள் அணிந்து புடை சூழ வருகிறார். மேலும் செங்கல்பட்டு பகுதி மக்களை ஆசிர்வாதம் வாங்க வேறு வரச்சொல்கிறார் என மக்கள் குமுறுகின்றனர்.
அன்னபூரணி சில ஆண்டுகளுக்கு முன்னர் லட்சுமி ராமகிருஷ்ணனின் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோக்களும் வைரலாகி வருகின்றனர்.