எஸ்டிபிஐ கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் கே.எஸ்.ஷானின் படு கொலைக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள மண்ணஞ்சேரி என்ற பகுதியில் ஷான் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது காரைப் பயன்படுத்தி திட்ட மிட்டு மோதி கீழே தள்ளி, சமூக விரோதி கும்பல்கள் பயங்கரமான ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில் ஷான் உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது .
ஷான் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் . எஸ் டி பி ஐ கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக தெரிவித்து கொள்கிறோம். பரிதாபமாக உயிரிழந்துள்ள ஷான் குடும்பத்திற்கு இழப்பிடு ரூ 1 கோடி கேரளா அரசு வழங்க வேண்டும். மேலும் ஷான் குடும்பத்தில் ஓருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது .
கேரளாவில் கடந்த மாதம் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் படுகொலை நேற்று எஸ் டி பி ஐ கட்சியின் மாநில செயலாளர் ஷான் படுகொலை செய்ய பட்டுள்ளார் இது போன்ற முக்கிய அரசியல் பிரமகர்களை படு கொலை செய்வதற்கு திட்டம் திட்டி நிகழ்த்தி வரும் சமூக விரோதி கும்பலை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாக கண்டிக்கிறது . ஆகவே இது போன்ற படு கொலைகளை நிகழ்த்தி கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் சமூக விரோதிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என கேரளா அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது .
எஸ் டி பி ஐ கட்சியின் மாநில செயலாளர் ஷான் என்பவரை கொடூரமாக படு கொலை செய்த சமூக விரோதி கும்பல் மீது எந்த வித பாரம் பட்சம் பாராமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து சட்ட ரீதியாக கடுமையான தண்டனைக்கு உள்ளாக்க பட வேண்டும்.
மேலும் இது போன்ற கொடூர சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என கேரளா முதல்வர் பிரணாய் விஜயன் அவர்களை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார் .