ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் வரை மோசடி செய்த புகாரில் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அ.தி.மு.க., ஆட்சியின் போது பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, வேலைவாங்கி தருவதாக ரூ.3 கோடி பண மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது.
இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து, அவரை கைது செய்ய டிஎஸ்பி தலைமையில் 2 காவல் ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படைகளை அமைத்து மாவட்ட எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.