குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சை கருத்துக்களை யூடியூப் சேனலில் பதிவு செய்த நாம் தமிழர் கட்சி பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
நாம் தமிழர் கட்சி விராலிமலை தொகுதி தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாலா (வயது 35). இவர், குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சை கருத்துக்களை யூடியூப் சேனலில் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் கீரனூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து பாலாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்