இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் மு.க.ஸ்டாலின்.
குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்த உயர் ரக ராணுவ விமானம், திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட ராணுவ உயரதிகாரிகள் 14 பேர் ஹெலிகாப்டரில் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளனர். மதியம் 1 மணியளவில் இந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளனது.
இந்த விபத்தில் இதுவரை 7 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், முப்படை தளபதி பிபின் ராவத் மோசமான நிலையில் கோவை ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. நிகழ்விடத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், தமிழக வனத்துறை அமைச்சர் ஆகியோர் நிகழ்விடத்தில் இருந்து வருகின்றனர்.
அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விபத்து குறித்து கேட்டறிந்தார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், மீட்பு பனியை துரிதப் படுத்த வேண்டும் என்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். மேலும் விபத்து குறித்து மேலும் விவரங்கள் அறியவும், காயமடைந்தவர்களை பார்க்கவும் இன்று மாலை 5 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலகிரிக்குச் செல்கிறார்.