• vilasalnews@gmail.com

நீலகிரி அருகே இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்து... இந்தியாவின் டாப் ஆர்மி ஆபிஷர்கள் நிலை என்ன?

  • Share on

வெலிங்டன் ராணுவ கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து இரண்டு ஹெலிகாப்டர்கள் புறப்பட்டுச் சென்றன. இந்த ஹெலிகாப்டரில் ஒன்று குன்னூரில் நஞ்சப்பசத்திரம் அருகே விபத்தில் சிக்கியது. விபத்தில் சிக்கிய இந்த ஹெலிகாப்டரில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவ தலைமைத் தளபதி நரவணே ஆகியோர் பயணித்ததாக இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் தேசியளவில் பதற்றம் நிலவி வருகிறது.

அந்த ராணுவ ஹெலிகாப்டரில் 14 ராணுவ அதிகாரிகள் பயணம் செய்ததாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. இதனை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் உறுதிப்படுத்தியுள்ளார். பனிமூட்டத்தின் காரணமாக ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மூன்று அதிகாரிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. 

மேலும் நான்கு அதிகாரிகளின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் யார் என்ற விவரம் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

கிழே விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்படரில் பயணம் செய்த ராணுவ உயரதிகாரிகளின் நிலை என்ன என்று தெரியவில்லை. ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  • Share on

டிசம்பர் மாத மழைப்பொழிவு இயல்பை விட அதிக மழை பதிவாகும்- வானிலை ஆய்வு மையம்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: நீலகிரி விரைகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

  • Share on