• vilasalnews@gmail.com

மீண்டும் தை- 1 தான் தமிழ் புத்தாண்டு... வெளியான அரசு துணிப்பை புகைப்படம்..

  • Share on
வழக்கமாக சித்திரை 1 ஆம் தேதியே தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  ஆனால் 2008 ஆம் ஆண்டு  திமுக ஆட்சியின் போது, அப்போதைய முதவராக இருந்த கருணாநிதி தை மாதம் 1 ஆம் தேதியை தமிழ் புத்தாண்டு தினமாக அறிவித்தார்.

சித்திரை 1 ஆம் தேதி சித்திரை திருநாளாக கொண்டாப்படும் எனவும், தமிழர் திருநாளான தை 1 ஆம் தேதியே தமிழ் புத்தாண்டு தினம் என்றும் கூறினார். ஆனால் 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர், மீண்டும் சித்திரை 1 அன்று தான் தமிழ் புத்தாண்டு என்று அறிவித்தார். தற்போது திமுக அரசு பொறுப் பேற்றவுடன் மீண்டும் தை 1 தமிழ் புத்தாண்டாக அறிவிக்கபப்டலாம் என்று கூறப்பட்டது . ஆனால் 2022-ம் ஆண்டுக்கான அரசின் பொது விடுமுறை தேதிகளில் சித்திரை மாதம் 1-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையின்போது நியாய விலைக் கடைகளில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு கொடுக்கவுள்ள 20 இலவச பொருட்கள் கொண்ட துணிப் பையில், ‘இனிய தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்’ என அச்சிடப்பட்டிருக்கிறது. பொங்கலுக்கு வழங்கப்படவுள்ள 20 பொருட்களும் வைத்து கொடுப்பதற்காக செய்யப்பட்டிருக்கும் பையில், தமிழக அரசு முத்திரை, பொங்கல் பானை, பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையிலான படம் ஆகியவை அச்சிடப்பட்டுள்ளது.

அதனுடன் ‘இனிய தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்’ - மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த துணிப்பை குறித்த போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.
  • Share on

பொதுவழி விட மறுத்த குடும்பத்தை கம்பிவேலியில் 4 நாட்களாக சிறை வைத்த கிராம மக்கள்!

டிசம்பர் மாத மழைப்பொழிவு இயல்பை விட அதிக மழை பதிவாகும்- வானிலை ஆய்வு மையம்

  • Share on