• vilasalnews@gmail.com

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்!

  • Share on

முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பரவலாக கன மழை பெய்து வந்தது. குறிப்பாக சென்னையில் இயல்பை விட அதிகமான மழை பதிவாகி உள்ளது. வடகிழக்கு பருவமழையால் டெல்டா மாவட்டங்களில்  விளைநிலங்கள் மழையால் சேதம் அடைந்தன. தொடர் மழையால் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி சேதமடைந்தன.  

இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பது வளர்ச்சி திட்டங்கள், புதிய திட்டங்கள் தொடங்குவது உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றுவதாக இருந்தது. இருப்பினும் தமிழகத்தின் பல  மாவட்டங்களுக்கும் மிக கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட தமிழக முதல்வர் உத்தரவிட்டார். இதன் காரணமாக நேற்று  நடைபெறவிருந்த அமைச்ச ரவைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு, இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு  நடைபெறுகிறது.  முதல்வர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் 4வது முறையாக நடைபெறும் இக் கூட்டத்தில் மழை, வெள்ள பாதிப்பு, நிவாரண நிதி அறிவிப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும், வெள்ள பாதிப்பு நடவடிக் கையின்போது அமைச்சர்களின் செயல்பாடுகள், அறிவித்த திட்டங்களை செயல்படுத்துதல், புதிய திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Share on

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு அறங்காவலர்கள் நியமனம் விண்ணப்பம் வரவேற்பு!

திருடர்களை பிடிக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர் வெட்டிப் படுகொலை!!

  • Share on