• vilasalnews@gmail.com

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு அறங்காவலர்கள் நியமனம் விண்ணப்பம் வரவேற்பு!

  • Share on

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் மற்றும் நகர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 30.11.2011 தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைத்தல் வேண்டும்.

முகவரி : இணை ஆணையர், இணை ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலைத்துறை, 106/H/5D/6 பாளைரோடு, மில்லர்புரம் மேற்கு தூத்துக்குடி-628008

விண்ணப்ப படிவங்களை கீழ்க்கண்ட அலுவலகங் களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்

  1. இணை ஆணையர் அலுவலகம் இந்து சமய அறநிலைத்துறை தூத்துக்குடி
    உதவி ஆணையர் அலுவலகம்
  2. இந்து சமய அறநிலைத்துறை தூத்துக்குடி
  3. ஆய்வாளர் அலுவலகம் இந்து சமய அறநிலைத் துறை, திருச்செந்தூர்
  4. அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,திருச்செந்தூர்

பரம்பரை அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிப்ப தற்கு உரிய தகுதி மற்றும் தன்மை குறித்து இணை ஆணையர், உதவி ஆணையர், ஆய்வாளர் அலுவலங் களில் விபரம் அறிந்து கொள்ளலாம்.

  • Share on

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு அறங்காவலர்கள் நியமனம் விண்ணப்பம் வரவேற்பு!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்!

  • Share on