• vilasalnews@gmail.com

சாலையில் மலர்வளையம் வைத்து இந்து முன்னணி நூதன போராட்டம்

  • Share on

திருச்செந்தூர் அருகே சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் சாலையில் மலர் வளையம் வைத்து நூதன போராட்டம் நடந்தது.

திருச்செந்தூர் - பரமன்குறிச்சி சாலையில் உள்ள ராமசாமிபுரம் அருகே கடந்த 2 ஆண்டுகளாக சாலை மிகவும் சேதம் அடைந்து உள்ளது. கடந்த சில மாதங்களாக ஆமை வேகத்தில் இந்த சாலையை சீரமைக்கும் பணி நடந்து வருகி றது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் இந்து முன்னணி சார்பில் மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் அதிகாரிகளின் மெத்தன போக்கை கண்டித்தும், சாலைப்பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி நூதன முறையில் சாலையில் மலர் வளையம் வைத்து போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில், இந்து முன்னணி நகர பொது செயலாளர் முத்துராஜ், நகர தலைவர் மாயா ண்டி, நகர துணை தலைவர் ராமச் சந்திரன், ஒன்றிய செயலாளர் ராஜூ, நகர பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரிதிவிராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • Share on

திருச்செந்தூர் கோயிலில் ரூ.300 கோடியில் பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

பள்ளி ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை!

  • Share on