2 ஜி வழக்கில் அ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோரை விடுவித்ததற்கு எதிரான வழக்கு விசாரணை அடுத்த மாதம் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்கும் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2 ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா, கனிமொழி எம்.பி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து சிபிஐ சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இந்த வழக்கை தினம்தோறும் விசாரிக்கும்படியும் சிபிஐ தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து அடுத்த மாதம் 13ம் தேதியிலிருந்து 15ம் தேதிக்குள் விசாரணை நடக்கும் என வழக்கை விசாரித்த நீதிபதி யோகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.