திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் கட்சிப் பணிகள் , அலுவல் பணிகளுக்கு மத்தியில் சைக்கிள் பயணம், உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை செய்து வருகிறார்.
உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொள்வது, நடைப் பயிற்சி செய்வது, ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது என உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாலை 5 மணிக்கு சைக்கிள் பயணம் மேற்கொள் வதற்காக சென்னையை அடுத்த முட்டுக்காடு வந்திருந்தார். மாமல்லபுரம் நோக்கி சைக்கிளில் புறப்பட்டார். சைக்கிள் ஓட்டும் வீரர் அணியும் உடை, கையுறை அணிந்து ஸ்டாலின் சைக்கிள் சென்றபோது வழிநெடுகிலும் பொதுமக்கள் புகைப்படம் எடுத்தனர். பின்னர் மாமல்லபுரம் சாலையில் உள்ள தேநீர்க் கடையில் அமர்ந்து தேநீர் அருந்திய முதல்வர் அங்கிருப்பவர் களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் சென்னை அடையாறு தியோஃபிகள் சொசைட்டி வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் அங்கு நடைப்பயிற்சி மேற்கொண் டவர்களுடன் உரையாடினார். அப்போது அவருடன் பேசிய பெண்மணி ஒருவர், எப்படி சார் இப்படி மார்க்கண்டேயனாகவே இருக்கீங்க என்று கேட்க, அதற்கு ஸ்டாலின் , உடற்பயிற்சி செய்கிறேன் என்று பதிலளித்தார். இந்த வீடியோ இணையத்தில் திமுகவினரால் அதிகம் பகிரப்பட்டது.