• vilasalnews@gmail.com

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் எப்போது? முக்கிய அறிவிப்பு வெளியாகிறது!

  • Share on

தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உள்ளது. 

தொற்று பாதிப்பை குறைக்க மத்திய , மாநில அரசுகள் முயற்சி எடுத்து வரும் நிலையில் நடக்க விருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. சில தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப் பட்டன. இந்த சூழலில் தற்போது தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை நடத்த தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் குரூப்-2, குரூப்-1ஏ உள்பட 38 வகையான தேர்வை எப்போது நடத்துவது என டிஎன்பிஎஸ்சி நாளை முடிவு வெளியாகிறது. அனைத்து தேர்விலும் தமிழ் மொழி பாடத்தாள் சேர்க்கப்படும் என அறிவித்துள்ள நிலையில் அதிகாரிகள் நாளை ஆலோசனை நடத்துகின்றனர். ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு குரூப் 2 மற்றும் குரூப்4 தேர்வுகள் எந்தெந்த தேதிகளில் நடக்கவுள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கிட்டத்தட்ட கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்ததால் படித்து முடித்து அரசு பணியில் சேர காத்திருக்கும் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி உள்ளனர். அத்துடன் அரசின் பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் உள்ளன. இதை கருத்தில் கொண்டே இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Share on

1 வருடம் பணிநிறைவு செய்தால் தற்காலிக ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு – தமிழக அரசு தகவல்!

முதல்வர் ஸ்டாலினின் லேட்டஸ்ட் கிளிக்!!

  • Share on