சென்னை உயர்நீதிமன்றத்தில், 10 புதிய நீதிபதிகளை நியமிக்க, உச்சநீதிமன்ற கொலிஜியம் அளித்த பரிந்துரைக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள, கண்ணம்மாள் சண்முகசுந்தரம், சத்திகுமார் , முரளி சங்கர் , மஞ்சுளா, தமிழ்ச்செல்வி, சந்திரசேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியன் ஆகியோர், உயர்நீதிமன்ற புதிய நீதிபதிகளாகின்றனர்.
இதன்மூலம், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54லிருந்து, 64 ஆக உயரும். 10 புதிய நீதிபதிகளில், முரளிசங்கர்-தமிழ் செல்வி ஆகியோர், தம்பதியர் என்பது குறிப்பிடத்தக்கது.