• vilasalnews@gmail.com

பெட்ரோல் பங்க் காதல் : 17 வயது சிறுவனை திருமணம் செய்த 19 வயது பெண் கைது!

  • Share on

பொள்ளாச்சி அருகே, 17 வயது சிறுவனை திருமணம் செய்த 19 வயது பெண்ணை, 'போக்சோ' சட்டத்தில் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி வந்தார். அப்போது, பொள்ளாச்சி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 26ம் தேதி, வீட்டில் இருந்து வெளியேறிய இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி, மகளிர் போலீசார் வழக்கு பதிந்தனர். விசாரணையில், ஆசை வார்த்தை கூறி சிறுவனை அழைத்துச் சென்று, இளம்பெண் திருமணம் செய்தது தெரிந்தது. 'போக்சோ' சட்டத்தில் அந்த பெண்ணை, மகளிர் போலீசார் கைது செய்தனர்.

  • Share on

அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற ஐஏஎஸ் அதிகாரி!

சென்னையில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை - தமிழக அரசுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் தேசிய கழகம் நன்றி!

  • Share on