சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 8ம் தேதி முதல் கூடுதலாக நாள்தோறும் 8 சிறப்பு ரயில்கள், வாராந்திர ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எழும்பூரில் இருந்து 8ம் தேதி முதல் மன்னார்குடிக்கு ஒரு சிறப்பு ரயிலும், சென்னை டாக்டர் எம்ஜிஆர் சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு ஒரு சூப்பர்பாஸ்ட் ரயிலும், மங்களூர் சென்டிரல் மற்றும் பாலக்காட்டுக்கு தலா ஒரு ரயிலும் இயக்கபடுமென கூறியுள்ளது.
கோவை-நாகர்கோயில் இடையே ஒரு சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயிலும், எழும்பூரிலிருந்து குருவாயூர், ராமேஸ்வரத்துக்கு தலா ஒரு ரயிலும் இயக்கப்படுமென தெரிவித்துள்ளது.
எழும்பூரிலிருந்து நாகர்கோயிலுக்கு 10ம் தேதி முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுமெனவும் கூறியுள்ளது. சிறப்பு ரயில்கள் அனைத்தும் முன்பதிவு பெட்டிகள் கொண்டவை எனவும், இதற்கான முன்பதிவு 2ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குமெனவும் அறிவித்துள்ளது.